Friday, 26 December 2014



"கண்ணே கண்மணியே...
கனிவான நல்லமுதே....
தாலாட்டி மகிழ்ந்த மனம்...
தவிக்கிறது செல்லமுத்தே...!
கிழிந்த சேலையுடன்...
இழிந்த நிலை எனக்கு...!
உன்ன வந்து பாக்க...ஓயாத ஆசைதான் !
வண்டிச் செலவுக்கும்...
அடகு வைக்க ஒண்ணுமில்ல....!
பால் விலை ஒசந்ததனால்...
தயிர் சோறும் எங்களுக்கு....
ஆடம்பர உணவாகிப் போச்சி ...!
நீயனுப்பும் ரூபாய்க்குக்
காத்திருந்து காத்திருந்து ....
கவலைதான் வருகிறது...!
கடுதாசியும் வரவேயில்ல...!
நீ வந்து எங்க நெல பாத்தா பயப்படுவ...
நல்ல எஞ்சாமி ...
நெசமா நீ வரவேணாம்...!
பணம் அனுப்பு...
உன் படமாவது அனுப்பு...!
பாத்து நெகிழுகிறேன் ...
பாசமான உம்மொகத்த...!"
என்று நான் போனமாசம்
எழுதிய கடுதாசி கெடச்சுதா...?
இதுகூட..
நெனப்பூட்ட அல்ல மகனே...
நெனசசிக் கிட்டிருக்கேன்- றத ...
நெல நாட்ட....!

No comments:

Post a Comment