Thursday, 25 December 2014

படித்தவன் 

படிச்சி முடிச்சாச்சி... 
படாத பாடு பட்டாச்சி ...!
வேலையத் தேடித்தேடி
வேதனைதான் உருவாச்சி...!


அடுத்த ஊரு வேலைக்கின்னு
அவசரமா போனாக்கா...
ஆளு அதிகமுன்னு
ஆறுவாட்டித் திருப்பிட்டாங்க....!
ஊட்டக் காப்பாத்த
ஊரூரா அலஞ்சாச்சி...
அலஞ்சிக் கெடச்சதுல
அரை வயித்துக் கஞ்சாச்சி .....!
வயித்தக் கழுவிக்கவே
விதவிதமா அழுக்கானோம் ....
விடிவு பொறக்குமுன்னு
வீராப்பா வாழ்ந்திருந்தோம்...!
பட்டணத்து வேலைக்கின்னு
பழனிச்சாமி வரச்சொன்னான்...
பெட்டி,பை,துணியோட ..
ஊட்ட உட்டுப் போனேன்....!
(சேலைக்கி ஓரம் மாரி
சாலைக்கி நடைபாதை...)
சிநேகிதன் தயவுல
சின்னதா கடை விரிச்சேன்....
வாய்நோவ வேபாரம்
வயிறாற சாப்பாடு....!

அப்பிடி இப்பிடின்னு
ஆறுமாசம் ஓடிப்போச்சி....!
நித்தநித்தம் நூறு ரூபா
மொத்தமா ....மீசக்கார மாமாவுக்கு...!
காலரத் தூக்கிவுட்டு
கஜா அண்ணன் வந்தாக்கா....
அவசரமாத் தரவேணும்
அவருக்கொரு அம்பது....!
சங்கத்துக்கு சந்தா....
தங்கறதுக்கு வாடக ...
எல்லாம் போவ ஒன்னும் நிக்கல....!
பாழும் மனசுல
பட்டிமன்றம் தெனந்தோறும்...
போலாமா வேணாமா....
பெத்தவங்க மூஞ்சப் பாக்க....!

No comments:

Post a Comment