முதல்...
பள்ளியிலிருந்து புறப்பட்டோம்...
உற்சாகமான உதகை சுற்றுலா...!
படகுக்குழாம்...
ஓடமும் துடுப்பும் குளமும் மறந்து விட...
உடனிருந்த நீ மட்டும் ஆழ நினைவுகளில்....!
காலம் கடந்து நினைவுக் கிணற்றைத்
கவிதை அழகுடன் தூறு வாறுகிறேன்....!
உடன் படித்தோர் அனைவரும் மேல்வகுப்பில்....!
நாம் மட்டும் இரண்டாம் முறையாக அதே வகுப்பில்...
அப்போதுதான் ஒன்றுபட்டோம் ……
அவ்வப்போது பேசிக்கொண்டோம்...!
தொடர்ந்து நான்கு நாட்கள் வரவில்லை நீ வகுப்புக்கு !
என்னவென்று கேட்க யாரும் தொடர்பிலில்லை.....!
பாடக் குறிப்பேடு வாங்குவதாய்ப்
போக்குக்காட்டிக்கொண்டு... பொழுது சாய
முதன்முதலாய் உன் வீடு வந்தேன் முகம் பார்க்க....!
பார்வைப்பாசம் நீ உள்ளிருந்தாய்
பார்க்கமுடியாது என்றார் உன் தாய்...!
உடனே உன் அக்கா வந்தார்; குறிப்பேட்டைத் தந்தார்....
உன்னைப்போலவே புன்னகைத்து....!
விரைவு இரயிலென நாட்கள் கடந்தன....
வகுப்பில் எப்போதாவது தலை நிமிர்ந்தாய்...
என்னைப்பார்க்க மட்டும்...
அதுவும்கூட அதிகநேரம் நீடிக்காது...!
அழகிய வண்ண மின்னலாய்....!
ஆண்டிறுதி...வந்தது.... எனைப்பார்த்து நீயழுதாய்....!
கூடிழந்த குருவிகளாய் வருந்தினோம்....!
கூடியிருந்த நண்பர்களை வருத்தினோம்....!
தேர்வுகள் முடிந்து... கல்லூரி போனபின்பு
நீ வேறு நான் வேறாய்த் திசைகளைத்தேர்ந்தோம்....!
எதிர்பாரா விதமாக எப்போதோ ஒரு முறை .....
உன் பேருந்திலிருந்து நீயும்
என் பேருந்திலிருந்து நானும்....
வார்த்தையற்ற கவிதையாக
விழிகளால் பேசினோம்...!
உனைப்பார்க்க இயலாத நிலையிருந்தாலும்...
பார்த்துக்கொண்டுதான் இருந்தேன்
பத்தாம் வகுப்பு நிழற்படத்தில்....!
அப்போதெல்லாம் அலையலையாய் இன்பம்...!
உன்னையும் உன் உன்னத நினைவுகளையும்....
பதமாக வைத்திருந்தேன் பைந்தமிழில் கவிதையாக.....!
சில மாதம் கழித்து என் வீடு நீ வந்தாய்....
சில்லென்று வியந்தேன்...சிலநொடி திகைத்தேன்....!
மனமெல்லாம் மகிழ்வலைகள்...! மின்மினிகள்...!
குழம்பினேன் நான்.... தெளிவுடன் நீ....
எனக்கே எனக்கென ... என் பெயர் எழுதி....
தரை பார்த்துக் கொடுத்தாய் திருமண அழைப்பிதழை....!
அதிலும் அழகாய்த்தான் இருந்தது....
கண்ணா.... உன் கையெழுத்து.....!!
No comments:
Post a Comment