Thursday, 25 December 2014



விதைத்த போதே....
விருந்தாகியிருக்கலாம்....
பறவைகளுக்கு....!
கதிரான போதே....
களவாகியிருக்கலாம்....
எலிகளிடம் ....!
அறுத்தபோதோ....
அடித்தெடுத்தபோதோ....
அங்கங்கே விழுந்திருக்கலாம்....!
கடைக்கு வந்தபோதோ....
எடைக்கு வந்தபோதோ....
உலைக்கு வந்தபோதோ....
இலைக்கு வந்தபோதோ...
தவறுதலாகத் தவறியிருக்கலாம்.....!
எல்லாம் தாண்டி எம்மிடம் வந்ததை.....
எப்படி...முடிகிறது.... வீணடிக்க....!?
ஒவ்வொரு தானியத்திலும்.....
அவரவர் பெயராம்.....!
உண்மையாக , உறுதியாக - இனி
உணவை வீணாக்கமாட்டோம் ....!!

No comments:

Post a Comment