கருவறை... தூளி.... தொட்டில்... பாய்.... மெத்தை.... கட்டில்.... பலவும் கடந்து பாடை .... இடையில் கிடைத்திடும் மேடை..... முழங்கப்போகிறாயா.... வழங்கப்போகிறாயா.....?
மறந்துபோன நிகழ்வை மகிழ்வுடன் நினைவூட்டி இப்போது வந்து கைகுலுக்கி மறவாமல் நன்றி சொல்கிறார்...!
எப்போதோ செய்த அவசர உதவி... . மீண்டும் உயிர் பெறுகிறது... அவசியமின்றி...!
கவியெனக் காலாற நடந்து கலையெனப் போகிற போக்கில் எட்டிப் பார்க்கிறாய்…. எனை என எளிதாக நினைத்தேன்....! நீயோ.... சிந்தாமல் சிதறாமல் சின்னப் புன்னகையால்... சொல்லாமல் கொள்ளாமல் கொள்ளையிட்டுச் செல்லுகிறாய்....!