Sunday, 1 February 2015

ஆழ்ந்து படித்திருந்த
அற்புதத் தருணத்திலே...
“அய்யோ பாம்”பென்ற
அலறல் வெளிக்கேட்க...
அவசரமாய்ப் பாய்ந்தோடி
அப்பாம்பை நான் பார்த்தேன்...!
கனத்துப் பழுப்பாக
கதவருகே படம்விரிக்க...
“அடித்துப் போடடா“ வென்றே
அறைகூவல் மகனுக்கு...
அவனோ அசையாமல்
அழகாகப் படம் பிடித்தான்....!

No comments:

Post a Comment