Thursday, 2 April 2015

அறியாமையை அகற்றி இருக்கிறேன்...
திறமைகளைப் பாராட்டி இருக்கிறேன்...
இன்றுதான்... தெரிகிறது....
அவர்களுள் நான் வேரோடி இருக்கிறேன்...!

திட்டி இருக்கிறேன்...
அதட்டி இருக்கிறேன்...
கோபத்தைக் கூட கொட்டி இருக்கிறேன்...
இருந்தும் கூட... இவர்கள் இன்று...
மூன்றாண்டு படிப்பினை முடித்து...
மொத்தமாய்ப் பிரிவதாய் நினைத்து...
கைக்குட்டையால் கண்ணீர் மறைத்து...
புதுமை இது ...
புதைத்துக் கொள்கிறார்கள்...
நிஜமான அன்பின் கண்களுக்குள்...
நீங்கா நிழற்படமாக என்னை...!
புன்னகையோடு இருந்த என்
கன்னங்களில் கசிகிறது ஆசிரிய அன்பு....!

நீண்ட நாட்களுக்குப் பின்பு...!! 

No comments:

Post a Comment